Limited edition with Unlimited thoughts

Jokes, Funny Scribblings, and some useful information

Friday, April 20, 2007

Thathuvams from தீவிரமாக யோசிப்போர் சங்கம்

Again a big collection from the mails and sms

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை

விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார். ஆனா, கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா?

செருப்பு இல்லாம நாம நடக்கலாம். ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம். ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும். ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா? நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!! அதேமாதிரி, என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம், ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா? இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா? (டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

கொலுசு போட்டா சத்தம் வரும். ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது. இதுதான் உலகம் (ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)

என்னதான் பெரியவீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது.

இளநீர்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு. அதுக்காக,இளநீர்ல போர் போடவும் முடியாது, பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும், ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம். ஆனா ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது !!!

வண்டி இல்லாமல் டயர் ஓடும். ஆனால்...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம். சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?
"Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e" இருக்கும்.

Punch for the day
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும்போது கடன் வாங்கித்தான் ஆகணும்.

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home